திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயர தீபமலையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது. ப்ராண கேந்திரா அமைப்பு, மாநகராட்சி மற்றும் வனத்துறை இணைந்து நடத்திய இப்பணியில் வெளிநாட்டவர்கள், தமிழகத்துடன் ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த தன்னார்வலர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கந்தாஸ்ரமம், விருப்பாட்ச குகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. மாதந்தோறும் தூய்மைப் பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டது.