திருவண்ணாமலை ஈசான மைதானம் அருகில், ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலன் ஓய்வு அறையை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி குற்றவிளக்கை ஏற்றி தொடக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இந்த நிகழ்வை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி. ஆர். ஒ. இராம்பிரதீபன், தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையாளர் வேதநாயகி, மாவட்ட நலவாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் ஏ. ஏ. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.