திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநருமான தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், '388 உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்கள், மழைநீர் வடிகால், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள், உயர்மட்ட பாலங்கள், தாயுமானவர் திட்ட செயலாக்கம், குடிமைப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.