தி.மலை: பக்தரின் மொபைல், தங்கம் மீட்பு.. காவலருக்கு பாராட்டு

136பார்த்தது
தி.மலை: பக்தரின் மொபைல், தங்கம் மீட்பு.. காவலருக்கு பாராட்டு
திருவண்ணாமலை கோயில் அருகே ஆட்டோவில் பயணம் செய்த பக்தர் ஒருவர் தனது மொபைல் போன் மற்றும் நான்கு கிராம் தங்கத்தை இழந்தார். தகவல் அறிந்த போக்குவரத்து முதல்நிலை காவலர் முருகன், உடனடியாக விசாரணை மேற்கொண்டு, ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் பொருட்களை கண்டுபிடித்தார். பின்னர் அவற்றை உரியவரிடம் நேரடியாக ஒப்படைத்தார். காவலர் முருகனின் நேர்மை மற்றும் பொறுப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டினர். காவல்துறையின் நம்பிக்கையை உயர்த்தும் இந்த செயல் அனைவராலும் வரவேற்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி