திருவண்ணாமலை: கொட்டும் மழையில் பக்தர்கள் கிரிவலம்

73பார்த்தது
திருவண்ணாமலையில் உள்ள 14 கி. மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா். இந்த நிலையில், புரட்டாசி மாத பெளா்ணமி புதன்கிழமை இரவு 7. 56 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை மாலை 5. 25 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.
இதேவேளையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழையோ, மிக அதிக பலத்த மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. எனவே, வயதானோா், பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் கிரிவலம் வருவதை தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் அறிவித்து இருந்தாா்.

இந்த நிலையில், நேற்று (அக்.,16) மாலை முதல் பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். இரவு 8 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. தொடா்ந்து, இன்று காலை வரை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், திருநோ் அண்ணாமலையாா், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடர்புடைய செய்தி