திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவி மலைப்பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழையால் குருவிமலை செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை இன்று (டிசம்பர் 1) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள தடுப்பணை குறித்தும் ஆய்வு செய்தார் இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.