திருவண்ணாமலை: வைகாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் சிரமமின்றி செல்ல, நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சில கடைகள் அகற்றப்பட்டாலும், ஆட்சியர் சென்றதும் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.