திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவண்ணாமலையையும் தீபத்தையும் பிரிக்க முடியாதது போல தன்னையும் இந்த புனித தலத்தையும் யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தார். ஏப்ரல் 8 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பக்தர்கள் கிரிவலம் செல்வதைப் போல அடிக்கடி தான் இந்த தலத்திற்கு வந்து வலம் வருவதாகவும் குறிப்பிட்டார். திருவண்ணாமலை ஆன்மிக அன்பர்களால் போற்றப்படும் முக்தி தரும் ஊராக விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.