திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகரித்த பக்தர்கள்

264பார்த்தது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகரித்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திலும், கிரிவலப் பாதையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி