திருவண்ணாமலை: நாம் தமிழர் வேட்பாளர் அறிமுகம்

0பார்த்தது
திருவண்ணாமலை: நாம் தமிழர் வேட்பாளர் அறிமுகம்
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் சு. விக்னேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த அறிமுகம் கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மாற்றத்தை உருவாக்க உறுதியாக செயல்படுவோம் என விக்னேஷ் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி