திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று இரவு கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்று சிறப்பு மரியாதை அளித்து, அண்ணாமலையார் கோவில் பிரசாதங்களை வழங்கினர். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.