கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 3-ந் தேதியும், சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 3 மற்றும் 4-ந் தேதிகளிலும், விழுப்புரத்தில் இருந்து நவம்பர் 30, டிசம்பர் 3, 4, 5-ந் தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.