திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நிர்வாகம், 2026–2027 கல்வி ஆண்டிற்கான சிறுவர் கருணை இல்ல மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த 5 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள், தாய் தந்தையர் இல்லாதோர் அல்லது ஒருவரை இழந்தோர் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் மற்றும் கல்வி வசதிகள் திருக்கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும். விண்ணப்பங்களை 04.03.2026 முதல் 31.05.2026 மாலை 5.45 மணி வரை www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இணை ஆணையர் அலுவலக முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும்.