திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு மே 30 இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து அருள்பெற்றனர். பின்னர் 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் பக்தி பரவசத்துடன் விடிய விடிய கிரிவலம் சென்றனர். பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக காவல்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.