நடிகர் சிவகார்த்திகேயன் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு, அவர் குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. அவரது நடிப்பில் வெளியான 'பராசக்தி' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, அவர் 'சேயோன்' படத்தில் நடிக்க உள்ளார்.