திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா.

2பார்த்தது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், நள்ளிரவு 12 மணியளவில் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே லிங்கோத்பவருக்கு தாழம்பூ அணிவித்து பூஜை செய்யப்படுகிறது. விழாவையொட்டி, அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி