மின் கோபுரத்தில் ஏறிய நபர் மீட்பு

0பார்த்தது
மின் கோபுரத்தில் ஏறிய நபர் மீட்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் மின் கோபுர விளக்கில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை பாதுகாப்பாக கீழிறக்கினர். விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது வீரா மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததும், அவர் ஏறியதும் தெரியவந்தது. மருத்துவமனை வளாகத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி