திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில், இன்று (20.02.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் தாய்மொழியின் சிறப்பையும் பாரம்பரியத்தையும் பேணிப் பாதுகாக்க உறுதியெடுத்தனர். தாய்மொழி பயன்பாட்டை அன்றாட வாழ்விலும் அலுவல் பணிகளிலும் அதிகரிக்க வேண்டும் என்றும், மொழி வளர்ச்சியே சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினார்.