திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் தலைமையில் காவல்துறையினர் நேற்று இரவு சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற இந்த ரோந்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.