திருவண்ணாமலையில் பாரா விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

4பார்த்தது
திருவண்ணாமலையில் பாரா விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (மார்ச் 4) காணொலிக் காட்சி மூலம், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய பாரா விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த அரங்கத்தை அவர் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் கு. பிச்சாண்டி எம். எல். ஏ. கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.