திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மே 28, வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பச்சரிசி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை தரிசித்து அருள் பெற்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.