திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலையில், இன்று (17ம் தேதி) கார்த்திகை சேமவார பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்திக்கு விபூதி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.