திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருவிளையாடல் என்னும் ருத்ர நாடகம் 21 வது ஆண்டு விழா அழைப்பிதழை கிராம பொதுமக்கள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணனிடம் வழங்கினர். இந்நிகழ்வின் போது உடன் கலசப்பாக்கம் ஒன்றிய திமுக செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.