திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த தற்காலிக கொட்டகைகள், கடைகள், இருக்கைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்பட்டன. வருகிற 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அஷ்ட லிங்கங்கள் அருகே கோயில் சார்பில் வைக்கப்பட்டிருந்த பிரசாத கடைகளும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டன. இதனால் பக்தர்கள் கிரிவலப் பாதையை எளிதாக பயன்படுத்த முடியும்.