தி.மலை: அதிகாரிகளுடன் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆலோசனை

85பார்த்தது
தி.மலை: அதிகாரிகளுடன் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆலோசனை
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மகா தீப மலை உள்ளது. எனவே, மலையின் புனிதத்தை காக்க மகா தீப மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

இதேபோல், 14 கி.மீ. கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்களை மீட்க வேண்டும் என்று மற்றொரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை மலை, கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மலையிலும், கிரிவலப் பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை நேரடி கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு நிலவரம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் ஆலோசனை நடத்தி, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி