திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை மற்றும் நில அளவைத் துறை சார்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிச்சுமை குறைப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.