வந்தவாசி அருகே அதியனூா் கிராமத்தில் கடந்த 10 நாள்களாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து, பெண்கள் காலிக் குடங்களுடன் பாதூா் - புன்னை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறினா். தகவலறிந்து வந்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.