திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகளை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் மற்றும் மாநகராட்சியில் நீா்வரத்துக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள், மின் பராமரிப்புப் பணிகள், ஏரி தூா்வாரும் பணிகள் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர், பணியை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் க. தா்பகராஜ், சி. என். அண்ணாதுரை எம். பி. ஆகியோா் உடனிருந்தனா்.