திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்

74பார்த்தது
திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி, வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, சென்றனர். திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். 

மாசி மாத பௌர்ணமி: இந்த நிலையில், மாசி மாத பௌர்ணமி வியாழக்கிழமை (மார்ச் 13) காலை 11.40 மணிக்குத் தொடங்கி, வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பிற்பகல் 12.57 மணிக்கு முடிகிறது. பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். மாலை 5 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. இரவு 8 மணிக்குப் பிறகு கிரிவல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. 

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இவர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருநோர் அண்ணாமலையார் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி