திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் தனது மகளுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டார். சுப்ரமணியபுரம், ஆடுகளம், நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் மூலம் பிரபலமான அவர், பக்தர்களுடன் இணைந்து பக்தி பரவசத்தில் கிரிவலம் சென்றது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரைக் கண்ட பக்தர்கள் உற்சாகமடைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். ஆன்மிக உணர்வுடன் அவர் கிரிவலம் சென்ற காட்சி சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.