கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, காக்கிநாடா டவுன் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 14-ம் தேதி காக்கிநாடாவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07617) 15-ம் தேதி திருவண்ணாமலை வந்தடையும். மறுமார்க்கத்தில், 16-ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07618) அதே நாள் இரவு காக்கிநாடா டவுன் சென்றடையும். இந்த ரயில் வேலூர், காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.