திருவண்ணாமலை: தனியார் பள்ளியில் விளையாட்டு தின விழா

67பார்த்தது
திருவண்ணாமலை: தனியார் பள்ளியில் விளையாட்டு தின விழா
திருவண்ணாமலை எஸ். கே. பி. வனிதா பன்னாட்டுப் பள்ளியின் விளையாட்டு தினவிழா போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பள்ளியின் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு, எஸ். கே. பி. குழும நிறுவனங்களின் தலைவர் எஸ். கருணாநிதி தலைமை வகித்தார். எஸ். கே. பி. வனிதா பன்னாட்டுப் பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி வரவேற்றார்.

கபாடி வீரர் பிரபஞ்சன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசுகையில், விளையாட்டு உடலுக்கு மட்டுமின்றி மூளைக்கும் நல்ல புத்துணர்ச்சியைத் தருகிறது என்றார். தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், ப்ளூ ஹவுஸ் அணி முதலிடமும், ரெட் ஹவுஸ் அணி இரண்டாம் இடமும், மஞ்சள் ஹவுஸ் அணி மூன்றாம் இடமும், கிரீன்ஹவுஸ் அணி நான்காம் இடமும் பிடித்தது. போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், எஸ். கே. பி. வனிதா மெட்ரிக் பள்ளி முதல்வர் காயத்ரி, எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், உடல்கல்வி ஆசிரியர் ராசுகுட்டி, உடல்கல்வி ஆசிரியை கிருஷ்ணவேணி, எஸ். கே. பி. கல்விக் குழுமத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் ஜஹிருத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you