தீபத்திருவிழா குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் பவனி.

1பார்த்தது
தீபத்திருவிழா குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் பவனி.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் காா்த்திகை தீபத்திருவிழாவின் 8-ஆம் நாள் விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை ஸ்ரீசந்திரசேகர் குதிரை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகர் குதிரை வாகனத்திலும் மேளதாளம் முழங்க மாடவீதிகளில் வலம் வந்தனர். பிற்பகல் சமய சொற்பொழிவு நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவில் பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் பவனி வந்தனர்.

தொடர்புடைய செய்தி