திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்ரவரி 18ஆம் தேதி முதுகலை மாணவர்கள், தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரி வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகள் ஏந்திய மாணவர்கள், கல்வி முன்னேற்றத்திற்கு மடிக்கணினி அவசியம் என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த கல்லூரி நிர்வாகம், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசிடம் எடுத்துச் செல்ல உறுதியளித்தது.