திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில் இருந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கோயில் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து ஆய்வு செய்ததில், தனிநபர் ஒருவர் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது. இணை ஆணையர் பரணிதரன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் பாலாஜி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை மீட்டு கோயில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.