திருவண்ணாமலையில் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சுமார் 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், தீபத்திருவிழாவையொட்டி, டிசம்பர் 5 ஆம் தேதி காலை வரை கனரக வாகனங்களுக்கு நகருக்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.