தி. மலை: 2வது நாளாக விடிய விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்.

0பார்த்தது
தி. மலை: 2வது நாளாக விடிய விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்.
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்றிரவு 9.45 மணிக்கு தொடங்கிய பவுர்ணமி இன்றிரவு 7.29 மணிக்கு நிறைவடைகிறது. பக்தர்கள் அண்ணாமலையார் மலையை கிரிவலம் சென்று அஷ்ட லிங்க சன்னதிகள், இடுக்கு பிள்ளையார், குபேர லிங்க சன்னதிகளில் தரிசனம் செய்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. அண்ணாமலையார் கோயிலிலும் கூட்டம் அலைமோதியது. நேற்று மாலை அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.