தாயுமானவர் திட்டம்: வீடு தேடி ரேஷன் விநியோகம்

0பார்த்தது
தாயுமானவர் திட்டம்: வீடு தேடி ரேஷன் விநியோகம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்ச் 2, 3, 4 ஆகிய தேதிகளில் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வீடு தோறும் வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாம்ஆயில் உள்ளிட்ட பொருட்கள் நேரடியாக வீட்டிலேயே வழங்கப்படும். நியாய விலை கடைகளுக்கு செல்ல முடியாத பயனாளிகள் சிரமமின்றி பொருட்களை பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி