தீபத் திருவிழாவையொட்டி களைகட்ட தொடங்கிய மாடு, குதிரை சந்தை.

0பார்த்தது
தீபத் திருவிழாவையொட்டி களைகட்ட தொடங்கிய மாடு, குதிரை சந்தை.
தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் குதிரை மற்றும் மாடு சந்தை நேற்று தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குவிந்துள்ளனர். காங்கேயம், ஜெர்சி, ஒங்கோல், கிர் என பல்வேறு வகையான மாடுகள் ரூ. 5,000 முதல் ரூ. 1.30 லட்சம் வரையிலும், காட்டு வாடா, மார்வாரி குதிரைகள் ரூ. 10,000 முதல் ரூ. 2 லட்சம் வரையிலும் விற்பனையாகின்றன. இந்த ஆண்டு முதல் முறையாக சந்தையில் ஒட்டகம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சந்தை நாளை வரை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி