திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது உடன் துணை ஆட்சியர் ராமகிருஷ்ணன், ஆரணி வட்டாட்சியர் கௌரி உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை துறை மற்றும் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.