திருவண்ணாமலை பேருந்துநிலையம் அருகே ஆட்டோவின் குறுக்கே பைக் ஒன்று வந்துள்ளது. இதனால் பிரேக் அடித்த ஆட்டோ, சாலையின் ஓரம் பைக்கில் நின்றிருந்த முதிய தம்பதி மீது மோதி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த தம்பதி, ஆட்டோவில் இருந்த கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.