திருவண்ணாமலை மாநகரில் அண்ணா ஆர்ச் சிக்னல் பகுதியில் உள்ள டிஜிட்டல் எல்இடி விளம்பரப் பலகை சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதால், பலத்த காற்று அல்லது மழை நேரத்தில் பலகை விழுந்தால் உயிர்சேதம் மற்றும் சொத்துசேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.