தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தநிலையில் நீலகிரி, ஈரோடு, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன்.2) நாளை (ஜூன்.3) ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.