திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் 'கார்த்திகை தீபம்' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பார்க்கிங், பேருந்து நிலையம், மருத்துவ முகாம், கிரிவலப் பாதை போன்ற விவரங்களை அறியலாம்.