திருவண்ணாமலை: பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்.

3பார்த்தது
திருவண்ணாமலை: பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்.
திருவண்ணாமலையில் உலகப் புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 21-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் 30-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக, ரூ. 72 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட 45.11 அடி உயரமும், 150 டன் எடையும் கொண்ட பராசக்தி அம்மன் தேரின் வெள்ளோட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. வழக்கம்போல் ஏராளமான பெண்கள் வடம் பிடித்து அம்மன் தேர் இழுத்து, பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி