திருவண்ணாமலையில் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தா்களின் வசதிக்காக 9 இடங்களில் 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 2,325 பேருந்துகள் நிறுத்தும் வசதி மற்றும் 130 காா் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் க. தா்பகராஜ் முன்னிலையில் பேருந்து இயக்கப் பணிகளை ஆய்வு செய்தாா்.