திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிப்ரவரி மாதம் நடந்த இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில், செல்போன் பயன்படுத்தி திருடிய சோளிங்கர் நகரைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் நேற்று வந்தவாசி பகுதியில் கைது செய்யப்பட்டார். தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.