வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று, பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த அசோக்குமார் (23), வெங்கடேசன் (20), முருகன் (23), சிவா (20) ஆகிய 4 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், அவர்களை கைது செய்து, கத்திகளை பறிமுதல் செய்தனர்.