திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், டிஏபிஎஸ் திட்டத்தில் முழுமையான பயன்கள், பணியில் மரணமடையும் உதவியாளர்களின் வாரிசுகளுக்கு பணிவாய்ப்பு, அனைத்து பணியிடங்களையும் நிரந்தரம் செய்தல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலமுறை ஊதியத்தில் பணியிடங்களை நிரப்புதல், கிராம நிர்வாக அலுவலர் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயித்தல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாநில அமைப்பாளர் கே. பெருமாள் தலைமை வகித்தார்.