திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தில், மத்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானுபிரகாஷ் எத்துரு தலைமை வகித்தார். திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்து, அவர் ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மத்திய தேர்தல் ஆணைய இயக்குனர் கே.கே. திவாரி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.